குறிஞ்சாக்கேணி பாலம்: நிர்மாணப் பணி ஸ்தம்பிதம்
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பால நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
புதிய பாலத்தினை நிர்மாணிக்கும் நோக்கில் குறித்த பாலம் இடிக்கப்பட்டது. இதனால்இ குறித்த பிரதேச மக்கள் மிக நீண்ட தூரம் பஸ் பிரயாணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
இந்த நிலையில்இ குறித்த பிரதேச மக்கள் படகு பயணத்தினை மேற்கொண்டனர். குறித்த படகுஇ கடந்த நவம்பர் 24ஆம் திகதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானமையால் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து குறித்த விடயம் தேசியப் ரீதியாக பேசுபொருளானது. இந்த நிலையில் ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம் அடுத்த ஒன்பது மாதங்களிற்குள் குறித்த பாலம் நிர்மாணிக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்தது.
எனினும் குறித்த சம்பவம் இடம்பெற்ற சுமார் இரண்டு மாதங்கள் கழிந்துள்ள நிலையிலும்இ குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிக்கள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதேவேளை, ஒப்பந்தக்காரர்களை மாற்றியதன் காரணமாகவே தாமதம் ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
அத்தோடு இவ்வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் அக்கறையற்று செயற்படுகின்றது. எனினும் பால நிர்மாணப் பணிகள் குறித்து தொடர்ந்து அவதானம் செலுத்துவதாகவும், துரிதப்படுத்த அழுத்தங்கள் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)