ஷண்முகா கல்லூரி ஆசிரியை பஹ்மிதா குணமாகாத நிலையில் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம்
திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் கடமையேற்க விடாமல் பாடசாலை சமுகத்தினால் கடந்த புதன்கிழமை (02) தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ் நோவு குணமாகாத நிலையில் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் கடமையேற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதாவை ஹபாயா அணிந்து வந்த காரணமாக பதவியேற்க விடாமல் பாடசாலைக்குள் புகுந்த குண்டர்களால் கழுத்து நெரிக்கப்பட்டு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதே வைத்தியசாலையில் ஷண்முகாவின் அதிபர் தன்னை ஆசிரியை பஹ்மிதா தாக்கியதாகக் கூறி அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளை திடீரென இன்று பஹ்மிதா றமீஸ், வைத்தியசாலையில் இருந்து நோய் குணமாகாத நிலையில் வெளியேற்றப்பட்டார்.
வைத்தியசாலைக்கு வெளியே கருத்துத் தெரிவித்த ஆசிரியை, "எனக்கு பூரண குணமாகாத நிலையில் வைத்தியசாலை நிர்வாகம் என்னை வெளியே அனுப்பிவிட்டது. ஆனால் எந்த அடியும் வாங்காத அதிபரோ இன்னும் வைத்தியசாலையில் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)