பேரீத்தம் பழ இறக்குமதிக்கான வரியினை நீக்க உத்தரவு
பேரீத்தம் பழ இறக்குமதிக்கான வரியினை நீக்க நீதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (24) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் புனித நோன்பு காலத்தில் முஸ்லிங்களின் இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்றும் தேவைகளுக்காக அதிகளவிலான பேரீத்தம் பழ தேவைகள் இருக்கின்ற சூழ்நிலையில் இதன் இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள 200 சதவீத வரியை நீக்குமாறு கோரி நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலொன்று இன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஸவுக்குமிடையே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், இசாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் இவ்விடயம் தொடர்பில் எடுத்துரைத்து பேரீத்தம் பழ இறக்குமதிக்கான வரியை நீக்கவேண்டிய தேவைகள் குறித்து நிதியமைச்சர் பஷில் ராஸபக்ஷவுக்கு விளக்கினர்.
விடயங்களை கேட்டறிந்த அமைச்சர் திறைசேரி செயலாளருக்கு வரியை நீக்குவது தொடர்பில் பணிப்புரை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)