ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வராக அகார் முஹம்மத் நியமனம்
ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வராக (Rector) உஸ்தாத் ஏ.சீ. அகார் முஹம்மத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை கலாபீட பரிபாலனச் சபைத் தலைவர் யாகூத் நளீம் இன்று (11) வியாழக்கிழமை வழங்கிவைத்தார்.
பல தசாப்தங்களாக இந்நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மறைவிற்குப் பின்னர் பணிப்பாளர் பதவி வெற்றிடமாக இருந்தது.
அந்த வகையில், கலாபீடத்தின் முதல்வராக உஸ்தாத் அகார் முஹம்மத் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் எனும் பதவி, புதிய கட்டமைப்பின் கீழ் கலாபீடத்தின் தலைமை நிர்வாகப் பதவியாக அமைகின்றது.
இதேவேளை, கலாபீடத்தின் கல்வித்துறைக்கு பொறுப்பான பணிப்பாளராக (Director of Academic Affairs) உஸ்தாத் ஸீ. ஐயூப் அலியும் நிர்வாகத்துறைக்குப் பொறுப்பான செயலாளராக (Secretary of Administrative Affairs) எம்.ஐ.ஏ. இம்தாத் அலியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனங்களும் பரிபாலன சபைத் தலைவரால் வழங்கி வைக்கப்பட்டன. கலாபீடத்தின் பல்வேறு துறைகளுக்கும் பிரிவுகளுக்கும் பொறுப்பான தலைவர்களின் நியமனங்களும் இந்நிகழ்வின் போது அறிவிக்கப்பட்டது. புதிய நிர்வாக கவுன்ஸிலின் நியமனம் தொடர்பிலும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடப்பட்டது.
Comments (0)
Facebook Comments (0)