ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு தேவையான பாதுகாப்பினை வழங்குமாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் அதிகார சபைக்கே இந்த உத்தரவினை ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று (18) வியாழக்கிழமை பிறப்பித்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியளித்தமையால் ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மூன்று நாட்கள் ஞானசார தேரர் வழங்கிய நீண்ட சாட்சியின் இறுதியில் ஆணைக்குழுவின் தலைவர் இந்த அறிவிப்பை விடுத்ததாக பொதுபலசேனா அமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
Comments (0)
Facebook Comments (0)