ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
பாராளுமன்றத்தில் கடந்த மாதம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இந்தச் சட்டமூலம் கடந்த யூலை மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் ஜூன் 21 மற்றும் ஜூலை 6ஆம் திகதிகளில் நடைபெற்றன.
இதற்கமைய இது 2023 ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டமாக இன்று (08) முதல் நடைமுறைக்கு வருகிறது.
சபாநாயகர் சான்றுரைப்படுத்தும் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர மற்றும் சட்டவாக்கப் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எச்.ஈ. ஜனகாந்த சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)