கொழும்பில் இடம்பெற்ற உலக அரபு மொழி தின நிகழ்வு
கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக அரபு மொழி தினத்தை நினைவுகூரும் நிகழ்ச்சி, கடந்த18 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டதோடு, மேலும் பல முக்கிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு விவகார அமைச்சகம் உட்பட பல அமைச்சுகளின் அரச அதிகாரிகள், பல நாட்டுத் தூதுவர்கள், இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் போது, சவூதி அரேபியாவின் பிரதி வேலைத்திட்டப் பிரதானி, அப்துல்-இலாஹ் ஒர்கூபி தனது உரையில், சவூதி அரேபியாவின் அரபு மொழி மீதான ஆர்வத்தை எடுத்துரைத்தார்.
சவூதி இராஜ்யத்தின் நிறுவுனரான மன்னர் அப்துல் அஸீஸ் அல் சௌதின் காலத்திலிருந்து, தற்போதைய மன்னரான சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சௌதின் ஆட்சி வரை, சவூதி அரேபியாவினுள்ளும் மற்றும் அதன் எல்லைகளை கடந்தும் அரபு மொழியை பரப்புவதற்கான முயற்சிகள் தொடர்பாக அவர் பேசினார்.
இதற்கான முக்கிய முயற்சிகளாக பல பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவங்களின் நிறுவல்கள் மற்றும் பல திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் அரபு மொழியைப்பற்றிய அறிவை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, பாரம்பரிய அரபி மொழியை பிராந்திய மற்றும் உலகளவில் பரப்புவதற்கும், அதன் நிலைத்தன்மையை பாதுகாப்பதற்கும், அதை வலுப்படுத்துவதற்கும் இயக்கமளிக்கும் நோக்குடன் மன்னர் சல்மான் உலகளாவிய அரபி மொழி அகாடமி நிறுவப்பட்டுள்ளது.
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் தலைமையிலான சவூதி அரேபியா அரபு மொழியை உள்ளகமாகவும் வெளிநாடுகளிலும் பரவச் செய்வதற்காக நிறுவியுள்ள மன்னர் சல்மான் சர்வதேச அரபி மொழி அகாடமியின் முயற்சிகளை பாராட்டி உரையாற்றினார்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக அரபு மொழித் துறைத் தலைவர் கலாநிதி ராசிக் அப்துல் மஜீத் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய துறையின் சிறேஷ்ட விரிவுரையாளரான பேராசிரியர் முஹம்மத் சலீம் ஆகியோர் இந்த நிகழ்வில் உரையாற்றினர்.
அவ்வுரையின் போது அவர்கள் அரபு மொழியின் முக்கியத்துவம், சர்வதேச தினத்தை கொண்டாடுவதின் அவசியம், மற்றும் அரபி மொழியின் நாகரிகங்களின் மறுமலர்ச்சியிலும், குறிப்பாக ஐரோப்பிய மறுமலர்ச்சியிலும் மற்றும் தொழில்துறை புரட்சியிலும், அரபுகளின் அறிவு பிற பண்பாடுகளுக்கு மாற்றியமைக்கப்பட்டதிலும் அதன் பங்களிப்பு குறித்து விளக்கினர்.
அத்துடன் கிரேக்க மற்றும் ரோமானிய அறிவியல் மற்றும் தத்துவங்களை மறுமலர்ச்சிக் காலத்தில் பரப்பியதிலும் அரபு மொழியின் பங்கு பற்றி குறிப்பிட்டார். மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் அரபி மொழிக்கான அக்கறையும் பராமரிப்பும், அதனை பிராந்திய மற்றும் உலகளவில் பரவலாக்கி வலுப்படுத்தவும், அதன் தொண்மையை பாதுகாக்கவும், அரபி மொழியை ஆதரித்து வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட மன்னர் சல்மான் உலகளாவிய அரபி மொழி அகாடமியின் நிறுவலையும் அவர்கள் பாராட்டினர்.
இந்த நிகழ்வின் போது, அரபு மொழியின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் அதன் அழகையும் குர்ஆனின் மொழியான அதனை உலகளவல் பரப்புவதில் சவூதி அரேபிய அரசின் மகத்தான முயற்சிகளை எடுத்துக்கூறும் வீடியோ காணொளிகளும் காட்சிபடுத்தப்பட்டன.
அரபு எழுத்தணிக் கலைஞர்களின் பங்கேற்புடன் அரபு எழுத்துக்களின் அழகை காட்டும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன, இது சிறப்பு விருந்தினர்களின் கவனத்தையும் ஆர்வத்தையும் அதிகமாக ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)