இலங்கையின் முதலாவது தொழிநுட்ப பீடம் நாளை திறப்பு

இலங்கையின் முதலாவது தொழிநுட்ப பீடம் நாளை திறப்பு

அனைத்து வசதிகளையும் கொண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் அமையப் பெற்றுள்ள இலங்கையின் முதலாவது தொழிநுட்ப பீடம் நாளை (08) திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளது.

ஹோமாகம, பிடிபான பிரதேசத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் மூன்று பில்லியன் ரூபா செலவில் இந்த பீடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ள இந்த நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன, பல்கலைக்கழக வேந்தர் இத்தபானே தம்மாலங்கார மகா நாயக்க தேரர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.