இலங்கையில் விக்டோரியா நூலாண்ட்

இலங்கையில் விக்டோரியா நூலாண்ட்

உதித தேவப்ரிய

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் கடந்த வாரம் தெற்காசியாவில் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.

ஜனவரி 28 முதல் பெப்ரவரி 3 வரை, அவர் கட்டாருக்கு செல்லும் முன்பு, நேபாளம், இந்தியா மற்றும் இலங்கைக்கு பயணம் செய்திருந்தார். இந்த வருகைகள் ஒவ்வொன்றும் அமெரிக்காவுடனான உறவுகளை வலுப்படுத்துவதை மையமாகக் கொண்டிருக்கும்.

இரு தரப்பு உறவுகளின் 75 வருடங்களைக் குறிக்கும் நோக்கிலும், "பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்கும்" நுலாண்டின் இலங்கைக்கான வருகை இருப்பதாக அரச திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செய்திக்குறிப்பு குறிப்பிடுகிறது.

இலங்கைக்கு நுலாண்ட் விஜயம் செய்வது இரண்டாவது தடவையாகும். முதலாவது தடவையாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது வருகை தந்திருந்தார்.

அவர் தனது சுற்றுப்பயணத்தின் போது, வணிக மற்றும் சிவில் சமூகத் தலைவர்களைச் சந்திப்பதையும், அமெரிக்க - இலங்கை கூட்டுப் பேச்சுவார்த்தையில் இணைத் தலைவராக பங்கேற்பதையும் நோக்காக கொண்டிருந்தார்.

நுலாண்டின் இரண்டாவது விஜயம் பரவலான பொருளாதார நெருக்கடிகள், வளர்ந்துவரும் அமைதியின்மை மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள முக்கியமான உள்ளூராட்சித் தேர்தல் ஆகியவற்றின் பின்னணியில் அமைந்திருந்தது.

உள்ளூராட்சித் தேர்தலில் வெல்லும் தரப்பு யாராகினும், நிச்சயமாக, உடனடியாக நாட்டை ஆள முடியாது. ஆனால் வெற்றிபெறும் தரப்பு கொழும்பின் வெளியுறவுக் கொள்கையின் போக்கை மாற்றியமைப்பதுடன் கணிசமாக வடிவமைக்கலாம்.

இரண்டாவது வருகையும் இந்திய - பசிபிக் பகுதியில் அதிகரித்த பதட்டங்களின் பின்னணியிலும், அதே போல் இந்திய - அமெரிக்க பரிமாணத்தின் சற்றே நுட்பமான மாற்றத்தின் பின்னணியிலும் அமைந்துள்ளது.

தெற்காசியா நினைவிற்கெட்டிய வரையில் முன்னெப்போதும் இல்லாத நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்த நெருக்கடியின் சுமையை இலங்கை உணர்ந்தது.

இப்போது பாகிஸ்தானும் அதற்கு ஆளாகப்போவதற்கான அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளது. பங்களாதேஷ் மற்றும் நேபாளம் இன்னும் அரசியல் மற்றும் பொருளாதார பாதிப்புக்களின் தாக்கத்திலிருந்து மீளாத அதே நேரத்தில் அந்நாடுகளில் பல பெய்ஜிங்கிலிருந்து பில்லியன் கணக்கான டொலர்களை கடன் நிவாரணம் வழங்குவதற்காக பெற்றுள்ள நிலையில் சீனா இந்த நாடுகளுக்கு நிதியுதவி வழங்குவதை நோக்கி தள்ளப்படுகிறது.

பாகிஸ்தான் மட்டும் தனியாக தனது வெளிநாட்டுக் கடனில் மூன்றில் ஒரு பங்கை சீனாவிடம் செலுத்த வேண்டியுள்ளது. தெற்காசியாவின் பொருளாதார வீழ்ச்சியானது உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் அமெரிக்க - சீனா பதட்டங்களில் திடீர் எழுச்சி ஆகிய இரண்டு முக்கிய செயற்பாடுகளுடன் ஒத்துப்போவதுடன் அவற்றை பின்தொடர்ந்து ஏற்பட்டதாகும்.

இவை உலக ஒழுங்கில் சில அடிப்படைப் பிளவுகளை முன்னுக்குக் கொண்டு வந்தன. மேற்கத்திய ஆய்வாளர்கள் இதை மேற்கத்திய மற்றும் மேற்கத்தியதல்லாத நெறிமுறைகளுக்கு இடையேயான மானிச்சியன் போட்டியாக சித்தரிப்பதில் திருப்தி அடைந்தாலும், உண்மை என்னவென்றால், பொதுவாக மேற்கு நாடுகள் மற்றும் குறிப்பாக அமெரிக்கா, பனிப்போருக்குப் பிந்தைய நிலப்பரப்பில் ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளது.

இத்தகைய பின்னணியில், தெற்காசியாவில் உள்ள இரண்டு தீவிரமான பிரச்சினைகளான உள்நாட்டு அமைதியின்மை மற்றும் தலைதூக்கும் வெற்றிடம் குறித்து அமெரிக்கா எச்சரிக்கையாக இருப்பது இயல்பானதாகும். அந்த வெற்றிடத்தை யார் நிரப்புவார்கள் என்பதுதான் அமெரிக்க அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தும் வினாவாகும்.

சீனா, தனது பங்கிற்கு, பிராந்தியத்தில் அமெரிக்காவின் அழுத்தங்களுடன் செயற்பட விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஸாம்பியா போன்ற நாடுகளில் கடன்களை மறுபரிசீலனை செய்வதற்கான முயற்சிகளை அது மேற்கொண்டிருந்தாலும், அது IMF இனுடைய விதிமுறைகளுக்கு இணங்காது என்பதை மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

"ஸாம்பியாவின் கடன் சுமையைத் தளர்த்துவதற்கான பிரதான விடயம், கடன் நிவாரண முயற்சிகளில் பலதரப்பு நிதி நிறுவனங்கள் மற்றும் வணிகக் கடன் வழங்குபவர்களின் பங்கேற்பில் உள்ளது" என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் சமீபத்திய செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

அனைத்து நிகழ்தகவுகளிலும், இதுவே இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையிலும் பெய்ஜிங்கின் தெளிவற்ற நிலைப்பாட்டை செயற்படுத்துவதுடன், இது இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ளது, ஆனால் குறைந்தபட்சம் IMF மற்றும் உலக வங்கியின் நியதிகளின் பிரகாரம் அது போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகம் உள்ளது.

இப்போது, ரஷ்யா - உக்ரைன் போரினால் உலக அமைப்பில் நாடுகள் ஒன்றுடனொன்று ஒரே நேரத்தில் தொடர்பை துண்டிப்பதற்கும், மீண்டும் இணைவதற்கும் வழிவகுத்துள்ளது:

தொடர்பை துண்டித்தலானது மேற்குலகம், ரஷ்யா மற்றும் கணிசமான அளவிற்கு சீனாவிலும் மற்றும் மீண்டும் இணைதல் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் மறுபுறத்தில் பிரிக்ஸ் மற்றும் அணிசேரா இயக்கம் மற்றும் இன்னும் பரந்த அளவில் மூன்றாம் உலக நாடுகளின் உறுப்பினர்கள் உட்பட, "எங்களில் எஞ்சியவர்கள்" என்று அழைக்கப்படுபவர்களாவர். பிந்தையது தெற்காசியாவை உள்ளடக்குகின்றது.

தெற்காசியாவில் பிராந்திய மேலாதிக்கமாக, ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் பரந்த இந்தியப் பெருங்கடலுக்குள் அதன் நோக்கங்கள் ஆகியவை அமெரிக்க அதிகாரிகளுக்கு சற்று கவலையளிப்பதாகும்.

இது பெய்ஜிங்குடனான அதன் விரோதம் உட்பட அதன் வெளியுறவுக் கொள்கைத் தெரிவுகள் மற்ற நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் சிக்கல்களால் முன்னெடுக்கப்படாது என்பதை நரேந்திர மோடி அரசாங்கம் தெளிவுபடுத்தியதிலிருந்து மிகவும் முக்கியமானது.

இந்த மற்ற நாடுகளில் வெளிப்படையாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியவை உள்ளடங்கும். இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த ஆண்டு ஸ்லோவாக்கியாவில் குறிப்பிட்டதை சுருக்கமாக கூறின், "ஐரோப்பாவின் பிரச்சினைகள் இந்தியாவின் பிரச்சினைகள் அல்ல."

இத்தகைய அறிக்கைகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு பரந்த மாற்றத்தைக் குறிக்கலாம், ஆனால் உண்மை என்னவென்றால், நாடு இப்போது மூலோபாய சுயாட்சி மற்றும் பிராந்திய மேலாதிக்கம் ஆகிய இரண்டு விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஒன்று மற்றொன்றுக்கான குறைநிரப்பியாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியா தனது தெரிவுகள் யாராலும் கட்டுப்படுத்தக்கூடாது என்று விரும்புவதுடன், தெற்காசியாவிலும் இந்தியப் பெருங்கடலிலும் தனது நிலையை உறுதிப்படுத்த விரும்புகிறது. கிழக்கிலிருந்து செயற்பட்டு மேற்கை பார்த்தல் இலிருந்து பல தசாப்தங்களாக பல்வேறு உத்திகளை பரிசோதித்து வந்தாலும், நரேந்திர மோடியின் கீழ் தான் ஒரு பிரதானமான தரப்பாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான டெல்லியின் உந்துதல் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் சீனா - அமெரிக்க பதட்டங்கள் நிச்சயமாக இந்த போக்குகளை வலுப்படுத்தியுள்ளதுடன், அரசியல் முன்னணியில் மட்டுமல்லாது ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றுவதற்கான திட்டங்களை அறிவிப்பதுடன் இந்தியாவின் பொருளாதாரமும் அவற்றிலிருந்து பயனடையக்கூடும்.

இந்தியா தொடர்பில் அமெரிக்கா எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளது என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை. மேலோட்டமாகப் பார்த்தால், இந்திய-அமெரிக்க உறவுகள் ஒன்று மற்றொன்றை பிராந்தியத்தில் சீனாவின் நோக்கங்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு இன்றியமையாத எதிர்ப்பாகக் கருதுகின்ற இடத்திலேயே இருக்கின்றன.

எவ்வாறாயினும், ரஷ்யா - உக்ரைன் போர் ஒரு ரணத்தை வெளிப்படுத்தியுள்ளது. ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதிலுள்ள இந்தியாவின் மௌனம் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் விரக்தியடையவில்லை என்றாலும், அவர்கள் இந்தியாவை பாதிப்பதற்குத் தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள்.

தனது தெற்காசியப் பயணத்திற்கு முன்னர், ரஷ்ய இராணுவ உபகரணங்களுக்கு மாற்றாக இந்தியாவிற்கு உதவுவது "நாம் செய்ய வேண்டிய பணியின்" ஒரு பகுதியாகும் என்று நுலாண்ட் அவர்களே வாதிட்டார்.

டிரம்ப் நிர்வாகத்தின் எச்சரிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் 2018 இல் இரு நாடுகளும் கையெழுத்திட்ட ஒப்பந்தம் மூலம் மாஸ்கோவில் இருந்து S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை தொடர்ந்து பெறுவதற்கான இந்தியாவின் தீர்மானம் குறிப்பாக கவலைக்குரியதாகும்.

இந்தியா தனது மூலோபாய சுயாட்சியை உறுதிப்படுத்த விரும்புகிறது. வெவ்வேறு அரசுகள் வெவ்வேறு நலன்களைப் கொண்டிருக்கின்ற, ஒரு சிலந்தி வலைக்குள் அரசுகளுக்கு இடையேயான மற்றும் அரசுகளுக்கு உள்ளாகவும் கூட மாறுகின்ற கூட்டணிகளையும் விரோதங்களையும் உடைய பல்முனை அமைப்பில் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

இந்திய பசிபிக் பகுதியில் சீனாவை அடக்கி, தெற்காசியாவில் கால் பதிக்க விரும்பும் சூழலில், அது அமெரிக்காவின் விருப்பத்திற்கு ஏற்றதாக இருக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். நிச்சயமாக, அதானி குழுமம் பற்றிய ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியின் சமீபத்திய வெளிப்பாடுகள் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே முரண்பாடுகள் வெளிவருவதைக் காட்டுகின்றன.

சர்வதேச உறவுகள் தொடர்பான கண்காணிப்பாளரான உமர் ராஜரத்தினம் குறிப்பிடுகையில்,

"அமெரிக்காவிற்கு," ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகியவை போட்டியாளர்களாகும். அது ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக தன்னிடம் உள்ள அனைத்தையும் அணிதிரட்டியுள்ளது. இந்தியா உடைப்பதற்கு மிகவும் கடினமான நாடாக இருக்கும்.

இதன் பொருள் என்னவென்றால், அமெரிக்கா தனது இந்திய - பசிபிக் மூலோபாயத்தின் மூலமாக இந்தியாவைக் கட்டுப்படுத்த முடிவு செய்தால், அதற்கு வேறு அணுகுமுறை தேவைப்படும்.

எவ்வாறாயினும், இப்போதைக்கு, இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா தீவிரமாக இறங்குவது சாத்தியமில்லை. "அமெரிக்கா நீண்டகாலமாக இந்தியாவை ஒரு பயனுள்ள கூட்டாளராகக் கருதுகிறது" என்று மற்றொரு சர்வதேச உறவுகள் தொடர்பான கண்காளிப்பாளரான ரதீந்திர குருவிட்ட வாதிடுகிறார்.

"எந்த ஒரு வெளிப்புற தரப்பினரையும் அதிகம் சார்ந்திருப்பதற்கு இந்தியா விரும்பவில்லை, ஆனால் சாதகநிலை அதற்கு எதிராக உள்ளன." இந்தியா மற்றும் வியட்நாமுக்கு உற்பத்தி மாற்றம் குறித்து அதிக நம்பிக்கை இருந்தபோதிலும், "இந்த நாடுகள் கையாளக்கூடியவை அதிகமாகும் என குருவிட்ட மேலும் கூறுகின்றார்.

சீனா ஒரு பொருளாதார வெற்றியாளராக நிலைநிறுத்த தயாராக உள்ளது. இந்தியா அதனது நிலையை சமன் செய்யாது, நிச்சயமாக சில காலத்திற்கு இயலாது. அந்த வகையில், நுலண்டின் வருகை, அதன் மூலோபாயத்தில் ஒரு மாற்றத்தைக் குறிப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவுடனான டெல்லியின் உறவுகளை வலுப்படுத்துவதாகும். "உக்ரைன் போன்ற பிரச்சினைகளில் இந்த நாடுகளுக்கு இடையே வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்தியா இன்னும் அமெரிக்காவிற்கு பயனுள்ள கூட்டாளராக உள்ளது."

பிராந்திய மட்டத்தில் மட்டுமல்ல, சர்வதேச அமைப்பிலும் இந்தியா தன்னை ஒரு பிரதான பங்காளராக உருவாக்கிக் கொள்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அது BRICS, G20, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்றவையாக இருந்தாலும் அல்லது SAARC, BIMSTEC மற்றும் ASEAN போன்ற தனது அயலில் உள்ள நாடுகளுடனான நெருக்கமான அமைப்புக்களாக இருந்தாலும் சரி, டெல்லியானது பல்முனை உணவின் பெரிய துண்டையே விரும்புகிறது.

அமெரிக்காவிற்கு நாட்டின் நம்பமுடியாத எழுச்சிக்கு இடமளிக்கும் அல்லது அதைக் கொண்டிருக்கும் இரண்டு தெரிவுகள் உள்ளன. தாமஸ் ப்ரீட்மேன் நியூயார்க் டைம்ஸுக்கு சமீபத்தில் எழுதிய கட்டுரையில் கூறியது போல், ஒரு வல்லரசு ஒரே நேரத்தில் இரண்டு போட்டியாளர்களை எதிர்கொள்ளக்கூடாது.

ஆனாலும் இதைத்தான் அமெரிக்கா செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய பின்னணியில், வாஷிங்டன் இந்தியாவையும் பகைத்துக் கொண்டால் அது முட்டாள்தனமாகும்.

தெற்காசியாவில், உண்மையில் இந்தியப் பெருங்கடலில் ஒரு பெரிய பங்கை அமெரிக்கா விரும்புகிறது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், அளவீடுகளின் சமநிலையில், அது இந்தியாவை திருப்திப்படுத்துவதுடன் அதன் தேவைகளுக்கு ஏற்றவாறு இதனைச் செய்ய முயற்சிக்கும். உடைவுப்புள்ளி இன்னமும் வரவில்லை.

உதித தேவப்பிரிய Factum இல் சர்வதேச உறவுகள் தொடர்பான பிரதம பகுப்பாய்வாளராவார். அவரை uditha@factum.lk இல் தொடர்பு கொள்ளலாம்.