சட்டவிரோதமாக கொவிட்-19 நோயாளியை பார்வையிட்ட இருவருக்கு தொற்று
உண்மையில் மிகுந்த மன வேதனையில் எழுதுகிறேன். !
எத்தனை தடவைகள் சொன்னாலும் இவர்கள் கேட்கவே மாட்டார்களா? கொரோனா தொற்று சம்பந்தமாக அரசாங்க அறிவுறுத்தல்களை பின்பற்றாமல், தனக்கு விரும்பியவாரு அன்றாட செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கும், அதி உச்ச ஒரு மடையர்கள் எம்மோடு இருக்கிறார்கள்.
அவர்கள் செய்த/ செய்கின்ற செயற்பாடுகள் எத்தனை பேருக்கு பெரும் இன்னல்களை கொடுக்க போகிறது என கொஞ்சம் கூட சிந்திக்க மாட்டார்களா?
ஒருவர் செய்கின்ற பிழைக்கு ஒட்டு மொத்த சமூகமும் பலிக்கடாவாக்கப்படுகிறது என புரிந்து கொள்ளும் பக்குவ நிலையை அடையவில்லையா?
⛔ ஒரு குடும்பம் ஊரடங்கு நேரத்தில், வெல்லம்பிட்டிய பகுதியில் இருந்து, பண்டாரநாயக்க மாவத்தையிற்கு தன்னுடைய உம்மம்மாவை பார்க்க சென்று இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வந்திருக்கிறார்கள்.
◾ஊரடங்கு சட்டத்தை மீறி அனாவசிய பயணம் செய்தது குற்றம் !
◾பயணம் செய்து, இன்னொரு இடத்தில் இரண்டு நாட்கள் தங்கியது அதையும் விட குற்றம்
◾அங்கிருந்து வந்து, அதனை பிராந்திய சுகாதார அதிகாரிக்கு அறிவிக்காமல் விட்டது அதையும் விட குற்றம்
◾ அது மட்டுமில்லாமல், அங்கிருந்து வீடு வந்து, தனிமைப்படுத்தி இருக்காமை எல்லாவற்றையும் விட பெரும் குற்றம் !
எத்தனையோ பதிவுகள்/ எத்தனையோ கானொளிகள்/ குரல் பதிவுகள் என பல விளக்கங்கள், எதை சொல்லி என்னதான் செய்ய..?
Comments (0)
Facebook Comments (0)