உயர்தரமாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டல் செயலமர்வு

உயர்தரமாணவர்களுக்கு உயர்  கல்வி வழிகாட்டல் செயலமர்வு

பரகஹதெனிய உயர் கல்வி அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் 2020/2021 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல் செயலமர்வொன்று நேற்று (02) புதன்கிழமை மாலை இணையவழியுடாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதிய முப்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்துகொண்டனர். . உயர்தரத்தில் சித்தி பெற்ற கலை, வர்தக, உயிரியல், கணித மற்றும் தொழிநுட்பப் பிரிவு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியுமான விடயங்கள் தொடர்பான சகல விளக்கங்களும் இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

பல்கலைக்கழக விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல் மற்றும் உளசார்பு பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் என்பன இதில் தெளிவுபடுத்தப்பட்டதுடன் உளசார்பு பரீட்சைகளின் கடந்த கால வினாத்தாள்கள் காண்பிக்கப்பட்டு அது தொடர்பான கூடுதல் விளக்கங்களும் வழங்கப்பட்டன.

இதில் வளவாளர்களாக பரகஹதெனிய உயர் கல்வி அமைப்பின் அங்கத்தவர்களும் பரகஹதெனிய தேசிய பாடசாலையின் பாழைய மாணவர்களுமான இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பல்கலைக்கழக மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவ மாணவிகளால் நடத்தப்பட்டது.

பரகஹதெனிய உயர் கல்வி அமைப்பு என்பது பரகஹதெனிய தேசிய பாடசாலையில் கல்வி கற்று தற்போது இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தமது உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களால் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும்.

மேற்குறிப்பிட்ட செயலமர்வு பரகஹதெனியவை சேர்ந்த மாணவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள மாணவர்களும் கலந்து பயன்பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

-அஹ்ஸன் அப்தர்-