அரச அதிகாரிகள் சிலருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு
அரச அதிகாரிகள் சிலர் தேர்தல்கள் ஆணைகுழுவிற்கு இன்று அழைக்கப்பட்டனர். அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர்கள் அனைவரும் இன்று காலை ஆணைக்குழுவுக்கு வருகை தரவேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
அவர்களுடனான கலந்துரையாடலொன்றை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது. பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments (0)
Facebook Comments (0)