கணவரின் கைது தொடர்பில் றிசாதின் மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்
முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாத் பதியுதீனின் மனைவியான ஆயிஷா றிசாத், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
தனது கணவரின் தன்னிச்சையான கைது தொடர்பிலேயே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆயிஷா றிசாத் இந்த கடிதத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)