"சீ-ஜின்பிங் ஏன் 'புதிய மாவோ' அல்ல"

"சீ-ஜின்பிங் ஏன் 'புதிய மாவோ' அல்ல"

ரதிந்திர குருவிட்ட

சீனா, வரையறைகளைக் கொண்டிருந்த ஒரேயொரு உயர் பதவியான ஜனாதிபதிப் பதவி மீதான கால வரையறைகளை நீக்கி தனது அரசியலமைப்பை 2018ஆம் ஆண்டில் மாற்றியது.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, சில வர்ணனையாளர்கள் அதிபர் சீ-ஜின்பிங் புதிய மாவோ சேதுங்காக மாறிவிட்டார் என மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் சில நிகழ்வுகளை அவர்கள் கண்டதன் அடிப்படையில் இந்த விவாதம் காணப்படுகின்றது.

திடமாக சொல்வதென்றால், இவை வலிமையான அம்சங்கள். ஆயினும், இவை சீன அரசியலின் முற்றிலும் தவறான ஒரு எண்ணத்தை தெளிவாக காட்டிக்கொடுக்கின்றன.

நிச்சயமாக, பலர் தமது சொந்த நாடுகளில் அரசியல் எவ்வாறு செயல்படுன்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில்லை. இருப்பினும், 2018ஆம் ஆண்டு முதல் சீ-இன் நகர்வுகளின் முக்கியத்துவம் பற்றி மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இது இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கும், சீ-இன் நகர்வுகள் உண்மையில் என்ன என்பதை சுட்டிக்காட்டுவதற்கும் ஒரு முயற்சியாகும்.

2018ஆம் ஆண்டில் என்ன நடந்தது

2018ஆம் ஆண்டில், நாட்டில் மிக உயர்ந்த அதிகாரம் உடைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு, நாட்டின் அரசியலமைப்புக்கு தொடர்ச்சியான மாற்றங்களை முன்மொழிந்தது. இந்த முன்மொழிவுகள் 2018 ஆம் ஆண்டில் தேசிய மக்கள் காங்கிரஸால் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாற்றங்கள் பற்றிய புதிரான அம்சம் என்னவென்றால், அவை முழுமையான அதிகாரத்தின் ஒருங்கிணைப்பை சுட்டிக்காட்டினாலும், மற்றொரு மட்டத்தில் அவை இந்த அலுவலகங்களின் சம்பிரதாய நிலையையையும் குறித்துக்காட்டுகின்றன. முக்கிய அறிஞர்கள் எழுதுவதற்கும் சொல்வதற்கும் மாறாக, இந்தப் பதவிகள் அவற்றினுள் எந்த விதமான சக்தியையும் உள்ளடக்கவில்லை.

சீனாவின் ஆளுகைப் பாணி

சீன ஆளுகைக் கட்டமைப்பு சிக்கலானது. சீன கம்யூனிஸ்ட் கட்சியும் (CPC) சீன அரசும் தனித்தனியான அங்கங்களாகும். ஆனால் அவை ஒன்றுக்கொன்று பிரதிபலிக்கும் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ஒவ்வொரு மாகாணமும் (மற்றும் நகரங்கள், மாவட்டங்கள் போன்ற மற்ற ஒவ்வொரு நிருவாக அலகும்,) ஆளுநர்கள், நகரமன்றத் தலைவர்கள், துணை நகரமன்றத் தலைவர்கள் மற்றும் மேலும் பலரும் அடங்கிய அரசாங்கம் உள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியும் செயலாளர் நாயகத்தின் தலைமையில் இந்தப் பகுதிகளுக்கான குழுக்களைக் கொண்டுள்ளது. பொதுவாக செயலாளர் நாயகம் தான் அழைப்பு விடுப்பார். நகரமன்றப் பதவி முற்றிலும் சம்பிரதாய பதவி அல்ல, ஆனால் நகரமன்றப் பதவியை வகிப்பவர் செயலாளருக்கு நாயகருக்கு கீழ்பட்டவராவார்.

மத்திய அரசு ஒரு பிரதமரை கொண்டிருக்கும், அவர் அதிகளவு அதிகாரத்தைப் பிரயோகிப்பார். ஆனால் 1982 ஆம் ஆண்டில் டெங் சியாவோபிங் ஜனாதிபதி பதவியை உருவாக்கினார்.

இதை நாம் பேச்சு வழக்கில் "போலி எஜமான்" என்று அழைக்கலாம். இந்தப் பதவி இப்போது மத்திய குழுவின் செயலாளர் நாயகப் பதவிக்கு இணையானதாகும். இதை நாம் "உண்மையான எஜமான்" என்று அழைக்கலாம்.

ஹூ யாபாங்கின் ஆட்சியின் போது லி சியானியன் ஜனாதிபதியாக இருந்தமை ஒரு விதிவிலக்கான நிகழ்வாகும். இது தவிர, உண்மையான எஜமானும் போலி எஜமானும் 1982ஆம் ஆண்டு முதல் ஒரே மாதிரியாக இருந்து வருகின்றார்கள்.

இருப்பினும், டெங் சியாவோபிங் செயலாளர் நாயகமாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் ஜனாதிபதியாகவும் இருந்ததில்லை. அவர் அமைத்திருந்த ஒரு ஆலோசனைக் குழுவுக்கு அவரே தலைமை ஆலோசகராக இருந்தார்.

டெங்கின் கீழ் ஹு யோபாங் மற்றும் ஜாவோ ஜியாங் செயலாளர் நாயகங்களாக இருந்தனர். மக்கள் விடுதலை இராணுவத்தை கட்டுப்படுத்தும் மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவர் என்று அழைக்கப்படும் மிக முக்கியமான பதவியை டெங் வகித்தார்.

ஓய்வு பெற்ற பிறகும், 1989ஆம் ஆண்டில் இந்தப் பதவியை தனக்கென தக்கவைத்துக் கொண்டார். தாராளவாத அரசியல் அனுதாபங்களால் நிச்சமாக ஹூ யாவோபாங் அல்லது ஜாவோ ஜியாங்கின் கட்டளைகளை, PLA அதிக ஆர்வத்துடன் பின்பற்றுவதில்லை என்று கூறப்படுகின்றது.

மாறாக, டெங் இந்த பதவிகளை தன்வசம் வைத்துக்கொள்வதில் வல்லவனாகவிருந்தார் - கட்சியின் செயலாளர் நாயகம், ஜனாதிபதி மற்றும் இராணுவ ஆணைக்குழுவின் செயலாளர் ஆகிய பதவிகளை - ஜியாங் ஜெமின் மூன்று கட்டங்களில் வகித்தார். 

அப்போதிருந்து, ஒரு மனிதன் மூன்று பதவிகளையும் வகிக்க வேண்டும், அதாவது திரித்துவம் (三位一) என்ற எண்ணம் சீனாவில் வழக்கமாகிவிட்டது.

மீண்டும், தெளிவாக கூறுவதானால்  ஜனாதிபதி பதவிக்கு அதிகாரம் கிடையாது. இது சம்பிரதாயமானது. கட்சியின் செயலாளர் நாயகமும், இராணுவ ஆணைக்குழுவின் செயலாளரும் தான் உண்மையான அதிகாரம் உடையவர்கள்.

செயலாளர் நாயகத்திற்கு கால வரையறைகள் கிடையாது. இராணுவ ஆணைக்குழுவின் செயலாளருக்கும் அத்தகைய கால வரை ஏதும் கிடையாது.

ஜியாங் ஜெமின் 1990ஆம் ஆண்டுகளில் இந்தப் பதவிகளை வகித்தார். நிச்சயமாக, அவரால் 10 ஆண்டுகள் மட்டுமே ஜனாதிபதியாக இருக்க முடிந்தது. அவர் மூன்று பதவிகளையும் விரும்புவதாக கூறப்படுகின்றது.

ஜியாங் 1989ஆம் ஆண்டில் மத்திய இராணுவ ஆணைக்குழுவின் செயலாளர் நாயகமாகவும், தலைவராகவும் ஆனார். இருப்பினும், அவர் 1993ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக வருவதைத் தாமதப்படுத்தினார்.

இது 2003ஆம் ஆண்டு வரை மூன்று பதவிகளையும் வகிக்க வைத்திருக்க அனுமதித்தது. மொத்தமாக 14 ஆண்டுகள் உண்மையான அதிகாரத்தில் இருந்தார்.

ஜியாங் அவருக்குப் பின் ஹூ ஜிண்டாவோவை தேர்ந்தெடுத்தார். 1998ஆம் ஆண்டில் ஹூ உப தலைவராக நியமிக்கப்பட்டார். ஹூ 2002ஆம் ஆண்டில் செயலாளர் நாயகமாகவும், 2003ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகவும், 2005ஆம் ஆண்டில் இராணுவக் கட்டளைத் தளபதியாகவும் ஆனார்.

2008ஆம் ஆண்டில், அவர் சீ- ஜின்பிங்-ஐ உப தலைவராக நியமித்தார். Xi 2012ஆம் ஆண்டில் செயலாளர் நாயகம் ஆனார். பின்னர் உடனடியாக இராணுவ ஆணைக்குழுவை பொறுப்பேற்றுக்கொண்டார். 2013ஆம் ஆண்டில் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

சீ ஜின்பிங் நினைத்தார்

2018இன் அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் சமீபத்தில் நடைபெற்ற தேசிய காங்கிரஸின் மூலம் இயங்கும் ஒரு தெளிவான தீம் உள்ளது: கட்சியின் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை அமல்படுத்துதல்.

CPC தலைமை நீண்ட காலமாக மிகைல் கோர்பச்சேவ் மற்றும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியால் ஈர்க்கப்பட்டு வருகிறது. ஒரு யதார்த்தவாத அல்லது சுய - பாதுகாப்புக் கண்ணோட்டத்தில், கோர்பச்சேவுக்குப் பிறகு சோவியத் யூனியனுக்கு என்ன நேர்ந்தது என்பதை உறுதிப்படுத்துவதே கட்சியை வலுப்படுத்துவதில் அவர்களின் நோக்கம்.

சீனா தாராளவாதமயமானதிலிருந்து, அதிகாரத்துவத்தினர் சட்டத்தைத் தவிர்ப்பதற்கும் தம்மை வளப்படுத்துவதற்கும் தனித்துவமான வழிகளை உருவாக்கியுள்ளனர். இந்த நடவடிக்கைகள் சீனாவின் ஸ்திரத்தன்மையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துச்செல்வதன் மூலம் இதைத் தீர்க்க, ஷி முயன்றார். இதற்காக, சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட போது அதிகாரிகளை விசாரிக்க, மத்தியக் குழுவுக்கு நேரடியாகப் பதிலளிக்கக்கூடிய ஒரு மாநில மேற்பார்வை சபையை அவர் உருவாக்கினார்.

Xi இதை சொந்தமாக கொண்டு வரவில்லை: இது ஒரு பழைய சீன பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும். பகுத்தறிவு தெளிவாக உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அரச ஊழியர்களும் கட்டளைகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.

மேலும் தமக்கு அதிக அதிகாரத்தைப் பெற முயற்சிப்பதை அவர்கள் நிறுத்த வேண்டும். சீனாவில் உள்ள மக்கள் ஜின்பிங்கின் நடவடிக்கைகளிலும் மற்றும் முடிவுகளில் திருப்தி அடைவதாகத் தெரிகின்றது. இருப்பினும் கட்சியை மறுசீரமைக்க அதிகம் பாடுபட வேண்டும் என்பது தெளிவாகின்றது.

தற்போதைய சீன அதிபர் ஒரு சம்பிரதாயவாதி. ஆகையால் அவர் எதையும் கைவிடப்போவதில்லை. முடிந்தவரை பேச்சு வார்த்தை மூலம் தீர்ப்பதற்கு விரும்புபவர். அவர் பொறுப்புடையவர் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றவர். எனவே கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு ஒழுக்கமான அமைப்பாக மாற்றுவதற்கு தேவையான வரை அவர் பொறுப்புடன் பாடுபடுவார் என்பதில் ஐயமில்லை.

புதிய ஒரு மாவோவா?

மாவோ 1966 ஆம் ஆண்டு வரை முறையாக சர்வாதிகாரியாக இருக்கவில்லை. அத்தகைய ஒருவராக மாற, கலாச்சாரப் புரட்சியை அவர் கட்டவிழ்த்துவிட வேண்டியிருந்தது.

மாவோ 1959 ஆம் ஆண்டு கிரேட் லீப் ஃபார்வேர்ட் மூலம் பாதுகாப்பாக உணராததால் அதை கட்டவிழ்த்துவிட்டார். கிரேட் லீப்பைத் தொடர்ந்து, மாவோ தான் புனிதமானவர் என்று உணர்ந்தார். ஆகையால் இது 1966 ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் செய்த செயல்களை விவரிக்கின்றது.

அதிபர் சீ-ஜின்பிங் முற்றிலும் மாறுபட்ட நிலையில் உள்ளார். அவருக்கு நாடு முழுவதும் முறையான ஒழுங்கான வழியில் அதிகாரம் உள்ளது. அவரிடம் பரந்த திட்டங்கள் இருப்பதால், அவர் எதற்கும் அச்சமடைய அவசியமில்லை.

ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டில் இருந்து, மோசமான அரசாங்கம் இயங்குவது பாதுகாப்பான அதிகாரத்தால் அல்ல என்று வாதிடலாம். இது அத்தகைய சக்தியின் பற்றாக்குறையிலிருந்து, கட்டுப்பாட்டைப் பராமரிக்க, ஏற்கனவே இருக்கும் ஒழுங்கைத் தூக்கியெறிய சக்திவாய்ந்தவர்களை வழிநடத்துகின்றது.

அதைத்தான் சீன வரலாற்று பாரம்பரியம் 乱 (சீர்குலைவு) என்று அழைக்கின்றது. மாவோவின் காலம் ஒழுங்கற்ற காலம். சீ-ஜின்பிங்கின் காலம், ஒப்பிடுகையில், திட்டவட்டமாக ஒழுங்கானது.

ரதிந்திர குருவிட்ட, இலங்கையின் கொழும்பைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆய்வாளராவார். இவர் சிங்கப்பூரின் NTUவில் உள்ள சர்வதேச கற்கைகள் தொடர்பான கல்வி நிறுவனமான எஸ். இராஜரட்ணம் கல்வியகத்தில் கற்று முதுநிலை பட்டத்தைப் பெற்றுள்ளார்.

அமெரிக்காவிலுள்ள டேனியல் கே. இன்யூயே ஆசியா-பசிபிக் பாதுகாப்பு ஆய்வு மைய புலமைப்பரிசில்தாரியும் ஆவார். அத்தோடு, அமெரிக்க வெளியுறவுத் துறையால் நடத்தப்படும் சர்வதேச பார்வையாளர் தலைமைத் திட்டத்தின் (IVLP) பங்கேற்பாளராவார்.

இவர், பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான பல கட்டுரைகளை எழுதியுள்ளதோடு, இலங்கை-சீன உறவுகள் குறித்து ஆழமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

Factum என்பது சர்வதேச உறவுகள், தொழிநுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றி இலங்கையில் செயற்படும் ஆசியாவவை மையமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழுவாகும். www.factum.lk என்ற இணையத்தளத்தில் இது தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் யாவும் கட்டுரை ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் மற்றும் அவை எவ்வகையிலும் நிறுவனத்தை பிரதிபலிக்க மாட்டாது.