குடும்ப வாழ்வை சீர்குலைக்கும் ஓரினச் சேர்க்கை

 குடும்ப வாழ்வை சீர்குலைக்கும் ஓரினச் சேர்க்கை

என்.எம்.நௌசாத் (BA)
சிரேஷ்ட உளவளத்துணையாளர்
கல்முனை

உலகில் படைக்கப்பட்ட அத்தனையும் ஏதோ ஓர் நோக்கத்திற்காக சோடிசோடியாகவே படைத்துள்ளதாக  அல்லாஹ்    தனது அருள் மறையில் குறிப்பிடுகின்றான்.

இதன்படி மனிதனையும் ஆண், பெண் என சோடியாகப் படைத்த இறைவன் அவர்களிடையே இனப்பால் கவர்ச்சியினூடாக   திருமண வாழ்வை ஏற்படுத்தி மனித இனத்தைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கத்தை நிறைவேற்றுகின்றான்.

இதனூடாக மனிதன் தனது பால் உணர்ச்சிகளை எவ்வாறு தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நேரிய வழியைக் காட்டியுள்ளான். இன்றைய சடவாத நவீனத்துவக் கலாசாரம், மனிதன் தனதுபாலுணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இயற்கைக்கு மாற்றமான முறையில் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் ஓரினப்பாலுணர்ச்சியில் (Homosexuality) ஈடுபடலாம் என்ற மடமைவாதத்தினூடாக குடும்பவியல் கோட்பாடு உடைக்கப்பட்டு புணிதமான பாலியல் உறவுகள் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறான உறவாடல்களை  எல்லாச் சமயங்களும் தடுக்கின்றது ஆனால் இஸ்லாம் இதனை விபச்சாரத்திற்கு ஒப்பானதாகப் பார்க்கின்றது. "நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம். அது மானக்கேடானதாகவும்,மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது". அல் குர்ஆன் (17:32)

இறை மறுப்பாளர்கள் மற்றும் நவீனத்துவ வாதிகளினால் நாகரீகம், உரிமை என்ற போர்வையில் எமது பிரதேசங்களில் ஆண்கள் மற்றும் பெண்களிடையே ஓரினச் சேர்க்கை விபச்சாரம் மலிந்து, குடும்ப வாழ்வு சீரழிந்து கொண்டு வருகின்றது.

இந்த நிலை இன்றய பெண்களிடையே அதிகரிது வருவது ஆபத்தான நிலமையாகும். இவ்வாறான பாலுறவுகள் பல நாடுகளில் தண்டனைக்குறிய குற்றமாகும். இலங்கையில் தண்டனைச் சட்டத்தில் 365ஆம் பிரிவின் "இயற்கையின் ஒழுங்கு விதிக்கு எதிரான சரீர உடலுறவு" எனும் தலைப்பின் கீழ்  10 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.

இருந்த போதிலும் உலகில் முதலாவதாக  இஸ்லாம் பெரும் பாவமாக கூறியுள்ளதுடன்  இதற்காக அல்லாஹ் ஒருசமுகத்தையே அழித்ததாக குறிப்பிடுகிறது. இதனை அல் குர்ஆன் பின்வரும் வரலாறின் மூலம் விளக்குகிறது.

உலகில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘சதூம்’ (சோதோம்) வாசிகளிடத்தில் ஓரினசேர்க்கை காணப்பட்டது.  இந்த மானக்கேடான செயலை ஒழித்து நேர்வழிப்படுத்துவதற்காக  அல்லாஹ் லூத் நபி அவர்களை அனுப்பிவைத்தான். இதை எதிர்த்து லூத் (அலை) அவர்கள் கடுமையாகப் போராடினார்கள். 

தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார்கள். இந்த தீயவர்களிடம் அவர்களின் தீய செயலை விட்டு விலகுமாறு நபி லூத் (அலை) அவர்கள் பிரச்சாரம் செய்தபோதும் அவர்கள் திருந்தவில்லை. இறுதியாக அல்லாஹ் இந்த சமூகத்தை அழிப்பதற்காக வானவர்களை (மலக்கு) அழகிய ஆண்களின் வடிவத்தில் அனுப்பி வைத்தான்.

ஆனால் இந்த பாவிகள் ஆண்கள் வடிவில் இருந்த வானவர்களை அனுபவிக்க விரைந்து வந்தபோது, லூத் (அலை) அவர்கள் கூறினார்கள்  ''நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்'' என்றும் கூறினார்.

இறைத் தூதருடைய எச்சரிக்கையை அவர்கள் கேட்கவில்லை. செய்வதறியாது திகைத்துப்போன லூத் (அலை) அவர்கள் இறுதியில் என்னுடைய மகள்களையேனும் திருமணம் செய்து கொள்ளுங்கள் இவர்களை விட்டுவிடுங்கள் எனக் கெஞ்சத் தொடங்குகிறார்கள்.

ஆனாலும் அவர்கள் நபியுடைய மகள்மார்கள் தேவையில்லை அவர்களுடைய வீட்டிற்கு வருகை தந்திருந்த இளைஞர்களை தங்களது பாவச் செயலுக்குட்படுத்துவதில் தீவிரமடைகிறார்கள்.

அப்போது   அல்லாஹ் அவனுடைய சோதனையை இறக்கினான். அவர்களின் பார்வையைப் பறித்து குறுடர்களாக்கி லூத் (அலை) அவர்களையும் குடும்பத்தையும் நேர்வழி பெற்றவர்களையும் ஊரைவிட்டு வெளியேற்றினான்.

பின்னர் இந்த இழிவான படுமோசமான குற்றத்துக்காக அதைச் செய்தவர்களை அல்லாஹ்  வேறெந்த சமூகத்தையும் தண்டிக்காத விதத்தில் நான்கு வகையான தண்டனைகளைக் கொடுத்துத் தண்டித்தான்.

அவையாவன:
1.அவர்களின் கண்களைக்  குருடாக்கினான்.
2.அவர்கள் வசித்த ஊரைத்  தலைகீழாக புரட்டினான்.
3.அவர்களின் மீது சுட்ட கற்களை தொடர்ந்து பொழியச் செய்தான்.
4. அவர்கள் மீது பேரிடியை விழச் செய்தான்.

இவ்வாறு அல்லாஹ்வுடைய வேதனை அம்மக்கள் மீது இறங்கியது, அல்லாஹ் தன்னுடைய வேதனையை ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக இறக்கி அழித்திருந்தாலும் இச்சமுதாயத்து மக்கள் இயற்கைக்கு மாற்றமான ஈனச் செயலை செய்தன் காரணமாக பின்னுள்ள சமூகத்திற்கு அத்தாட்சியாக அவர்கள் வசித்த ஊரையும் தலை கீழாக புரட்டி இயற்கை அமைப்பை சீர்குலைத்துக் காட்டியுள்ளான்.

தலைகீழாகப் புரட்டப் பட்ட ஊர் அரேபியப் பிரதேசத்தில் ஜோர்தான் கடல் கரையில் அமைந்துள்ளது. அதன் மீது கடல் சூழ்ந்திருக்கிறது. இதனை சாக்கடல் (Deadsea) என்று தற்போது அழைக்கின்றார்கள். குறிப்பிட்ட அக்கடலில் பொருட்கள் அமிழாது.

மனிதர்கள்   பலகை மிதப்பது போல் மிதப்பார்கள். இதற்கு காரணம் தலை கீழாகப் புரட்டப்பட்டதனால் புவியின் ஈர்ப்பு விசை மேல் நோக்கித் தொழிற்படுகிறது. மேலே அல் குர்ஆனில் கூறப்பட்ட உண்மை வரலாற்றினை உங்களின் சிந்தனைக்காக தந்துள்ளேன்.

இவ்வாறான பெரும் பாவங்கள் நமது பிரதேச பெண்களிடத்தில் பரப்பப்படுவதை நாம் அனுமதிக்கக் முடியாது இதனால் கட்டாயமாக இறைவனின் தண்டனை வந்தே ஆகும்.
ஓரினச் சேர்க்கையானது பரம்பரையாக கடத்தப்படுகின்ற ஓர் பழக்கம் அல்ல. அது சூநிலை காரணமாக ஏற்படுகிறது.

இதற்கான பின்வரும் காரணங்களைக் குறிப்பிட முடியம்.
1. ஒரே விடுதியில் தங்கியிருக்கும் நபர்கள்.
2. ஓரிடத்தில் வேலை காரணமாக தங்கியிருப்பவர்கள்.
3. சிறைக் கைதிகள்
4. அலுவலகப் பணி காரணமாகத் தங்கியிருப்பவர்கள்.
5. திருமணத்தின் பின் கணவன் / மனைவியுடன் உறவுகொள்ள இயலாத  
    சூழ்நிலையில் உள்ளவர்கள்.
6. சமூக வலைத் தளங்கள்
7. நண்பர்களின் தூண்டுதல்கள்.

எனவே, சமய வேறுபாடுகளை மறந்து சமூகப் பொறுப்பு வாய்ந்த மதத் தலைவர்கள், ஊர்  நிர்வாகிகள், அரசியல்வாதிகள் குறிப்பாக ஒவ்வொரு பிள்ளைகளின் பெற்றார்கள் மற்றும் கணவன் மார்கள் அனைவரும் இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு அவர்களை உரிய சமய, உளவியல் வழிகாட்டல்களினூடாக  சீர்படுத்தி  சமூகத்தைச் சீரழிவுகளிலிருந்தும் இறைவனின் தண்டனைகளிலிருந்தும் பாதுகாக்க ஒன்றிணைவோம்.