கொவிடினால் உயிரிழந்தவர்களை ஓட்டமாவடியில் அடக்க அனுமதி; 3 ஏக்கர் நிலமும் அன்பளிப்பு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தில் நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிவித்தல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தனவினால் மாகாண சுகாதார பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் போதானா வைத்தியசாலைகள் பணிப்பாளர்கள் ஆகியோருக்கு இன்று (05) வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கமைய ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காகிதாதி நகர் கிராம சேவகர் பிரிவிலுள்ள மஜ்மா நகரிலுள்ள காணித் துண்டொன்றிலேயே இந்த நல்லடக்கம் இடம்பெறுகின்றது.
கொவிட் - 19 ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு தனது சொந்த காணியின் 3 ஏக்கர் நிலத்தை ஓட்டமாடி பிரதேசத்தினைச் சேர்ந்த சமூக செயற்பட்டாளரான எம்.எப்.எம்.ஜௌபர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)