பாக். உயர் ஸ்தானிகரினால் பெண்கள் தொழில் முனைவோர் அபிவிருத்தி நிலையம் திறப்பு

பாக். உயர் ஸ்தானிகரினால் பெண்கள் தொழில் முனைவோர் அபிவிருத்தி நிலையம் திறப்பு

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் மத்திய மாகாண விஜயத்தின் போது, மத்திய மாகாண பெண்கள் வர்த்தக மற்றும் சிறு கைத்தொழில் சம்மேளனத்திற்கு விஜயம் செய்து, பெண்கள் தொழில் முனைவோர் அபிவிருத்தி நிலையத்தை திறந்து வைத்தார்.

சம்மேளன தலைவி  திருமதி காந்தி மதகம்மன மற்றும் சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர்கள் உயர்ஸ்தானிகரை வரவேற்றனர்.

இலங்கையின் நிபுணத்துவ வணிகப் பயிற்சியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் பெரேரா, மத்திய மாகாணத்தின் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதிலும், அவர்களை ஆதரிப்பதிலும் மத்திய மாகாண மகளிர் வர்த்தக மற்றும் சிறு கைத்தொழில் சம்மேளனத்தின் பங்கை எடுத்துரைத்தார்.

பிராந்தியத்தில் பெண்களுக்குச் சொந்தமான சிறு வணிக அமைப்புக்களை  ஊக்குவிக்கும் முயற்சியை மேற்கொண்டதற்காக உயர்ஸ்தானிகருக்கு மத்திய மாகாண பெண்கள் வர்த்தக மற்றும் சிறு கைத்தொழில் சம்மேளன தலைவி தனது  நன்றி தெரிவித்தார்.

பெண் தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிப்பதற்காகவும், மத்திய மாகாணத்தில் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் பாகிஸ்தான் அரசின் கணினிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்களின்  நன்கொடையுடன் இந்த மையம் நிறுவப்பட்டது.

மக்களுக்கு இடையேயான தொடர்பை ஏற்படுத்துதல், தொழில் முனைவோர் நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள ஆனால் வசதிகள் இல்லாத பெண்களுக்கு உதவுதல் மற்றும் இரு நட்பு நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்ற இந்த முன்முயற்சிகள் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பொது இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.