நீண்ட நாட்களின் பின்னர் மு.கா - சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் சந்திப்பு
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவது தொடர்பான பரஸ்பர கலந்துரையாடல் இன்று (24) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களில் இல்லத்தில் நடைபெற்றது.
நீண்ட கால இடைவெளியின் பின்னர் இரு தரப்பினரும் சந்திப்பினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபையின் சுயேட்சைக்குழு உறுப்பினர்கள், சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா, சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் மற்றும் கட்சியின் சாய்ந்தமருது முக்கியஸ்தர்களான அப்துல் பஷீர், யஹ்யாகான், ஏ.எல்.எம். புர்கான், அலியார் நஸார்தீன், மன்சூர் பாமி மற்றும் எம். முபாரக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்துக்கு விரைவில் தீர்வுகாண்பதுடன், யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் ஏககாலத்தில் சபைகள் பிரிக்கப்பட்டு சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவதென இதன்போது கலந்துரையாடப்பட்டது.
Comments (0)
Facebook Comments (0)