ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் உரிமம் மத்திய வங்கியினால் ரத்து
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு வங்கப்பட்டிருந்த உரி உரிமத்தினை இரத்துச் செய்துள்ளதாக மத்திய வங்கி இன்று (23) வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை - ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெடட் இந்தியாவின் கோரிக்கையைப் பரிசீலித்து பல நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு இலங்கையிலுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட்டின் வணிக நடவடிக்கைகளை முடிவுறுத்துவதற்கும் 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்ட விதிகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கியது.
நாணயச் சபையினால் விதிக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கமைவான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட்டின் செயற்பாட்டின் மீது வங்கி மேற்பார்வைத் திணைக்களப் பணிப்பாளர் திருப்தியடைவதனால், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட்டிற்கு வங்கித்தொழில் வியாபாரத்தினைக் கொண்டு நடாத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் 2020 ஒக்டோபர் 23 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இரத்துச் செய்யப்படுகின்றது.
Comments (0)
Facebook Comments (0)