'எஸ்.பி திசாநாயக்கவை உள நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்'

'எஸ்.பி திசாநாயக்கவை உள நல  மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்'

இலங்கையின் பிரபல அரசியல்வாதியாக 89ஆம் ஆண்டிலிருந்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங் கட்சி உறுப்பினரான எஸ்.பி திசாநாயக்கவை உள நல மருத்துவரிடம் உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் மக்கள் முன்னிலையில் அந்த கொடியை நோய் குறித்து, நகைச்சுவையை வெளிபடுத்தியமை தொடர்பில் வெட்கமடைய வேண்டும் என்றார்.

அவரது இல்லத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

"இந்த நாட்டுக்கு தேவையான வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் என பலர் இத்தொற்றால் பலியாகி வரும் நிலையில், தொற்றிலிருந்து எவ்வாற மக்களை பாதுகாப்பது என சகலரும் சிந்தித்துகாண்டிருக்கும் போது, இந்த பாராளுமன்ற உறுப்பினரின் கருத்து கவலையடையச் செய்கின்றது.

ஏன் இவ்வாறு மூளையில்லாமல் கதைக்கின்றார் என தெரியவில்லை. யாரின் தேவைக்காக இவ்வாறு கதைக்கின்றார் என்றும் தெரியவில்லை. ஒருவேளை அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ள தலைவர் கூறுகிறாரோ தெரியவில்லை மக்கள் முன்னிலையில், இவ்வாறு கதைக்க வேண்டுமென்று என தெரியவில்லை.

இவ்வாறு இவர் பாலர் வகுப்பு பிள்ளைகளைப் போல கதைப்பதால் தான், இவருக்கு இந்த அரசாங்கத்தில் அமைச்சப் பதவி ஒன்று கூட வழங்கப்படவில்லை போல" என்றார்.